/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு அறிவித்தும் செயல்படாத சார்பதிவாளர் அலுவலகம் பொதுமக்கள் ஏமாற்றம்

ADDED : பிப் 03, 2025 06:47 AM

அன்னுார் : அரசு அறிவித்தும், நேற்று அன்னுார் சார் பதிவாளர் அலுவலகம் செயல்படாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பிப். 2ம் தேதி தை மாத வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால், அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என எதிர்பார்த்து, தமிழக அரசு பிப். 2ம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அறிவித்தது.
ஆனால் நேற்று அன்னுார் சார் பதிவாளர் அலுவலகம் திறக்கப்படவில்லை. பூட்டியே கிடந்தது. இது குறித்து பொதுமக்கள் கேட்டபோது, 'ஞாயிறன்று பத்திரப்பதிவு அலுவலகத்தை திறக்க வலியுறுத்தும் அரசை கண்டித்து பணி புறக்கணிப்பு போராட்டம் அறிவித்துள்ளோம்,' என, தெரிவித்துள்ளனர். இதனால் பத்திரப்பதிவு செய்ய அன்னுார் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் நேற்று ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.