/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை குவிப்பால் நாற்றம்; பொதுமக்கள் அதிருப்தி
/
குப்பை குவிப்பால் நாற்றம்; பொதுமக்கள் அதிருப்தி
ADDED : ஏப் 04, 2025 11:04 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, குப்பை உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
பொள்ளாச்சி அருகே, எஸ்.பொன்னாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கலப்பம்பாளையம் உள்ளது. இங்கு, விவசாய பூமி, வீடுகள் அதிகம் உள்ளன. இங்கு குப்பை உள்ளிட்ட கழிவுகளை குவிப்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'கிராமத்தின் அருகில், கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை குவித்து குப்பை மேடாக மாற்றியுள்ளனர். இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
குப்பையில் கிடக்கும் இறைச்சி கழிவுகளை சாப்பிட நாய்களும் அதிகளவு வருவதால், அச்சமாக உள்ளது. இந்த இடத்தை சுத்தம் செய்து, விளையாட்டு மைதானமாக மாற்றினால், இளைஞர்கள் பயன்பெற முடியும்,' என்றனர்.

