sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கூடுதல் விலைக்கு முத்திரைத்தாள் விற்பனை பொதுமக்கள் அதிருப்தி

/

கூடுதல் விலைக்கு முத்திரைத்தாள் விற்பனை பொதுமக்கள் அதிருப்தி

கூடுதல் விலைக்கு முத்திரைத்தாள் விற்பனை பொதுமக்கள் அதிருப்தி

கூடுதல் விலைக்கு முத்திரைத்தாள் விற்பனை பொதுமக்கள் அதிருப்தி


ADDED : ஆக 22, 2025 11:38 PM

Google News

ADDED : ஆக 22, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், விடுமுறை நாட்களில் கூடுதல் விலைக்கு முத்திரைத்தாள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைகின்றனர்.

பத்திர கிரயம், ஒப்பந்தம் மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம், புதிய மின் இணைப்பு பெறுவது என, பல்வேறு தேவைகளுக்கு, முத்திரைத்தாள் பயன்படுத்தப்படுகிறது.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில், மாவட்ட கருவூலத்துறையில், உரிமம் பெற்றவர்கள் முத்திரைத்தாள் விற்பனை செய்கின்றனர். இங்கு, அரசு நிர்ணயித்துள்ள கமிஷன் அடிப்படையில், முத்திரைத்தாள் விற்கப்பட வேண்டும்.

முறைகேடுகளை தவிர்க்க, ஆதார் எண், கையொப்பம் பெற்றே, முத்திரைத்தாள் வழங்கப்படுகிறது.

ஆனால், சிலர், மதிப்புக்கு ஏற்றாற்போல, 30 ரூபாய் முதல் 150 வரை கூடுதல் விலைக்கு முத்திரைத்தாள் விற்பனை செய்யப்படுகிறது.

பத்திர பதிவுக்கு முத்திரைத்தாள் வாங்கும் போது, கணிசமான தொகையை லஞ்சமாக கொடுக்க வேண்டியுள்ளது. இதுபற்றி, முத்திரைத்தாள் விற்பனையாளர்களிடம் கேட்டால், கருவூலம் முதல் பதிவுத்துறை வரையிலும் 'கவனிப்பு' செய்ய வேண்டும். அதனால், விலை கூடுதலாக தான் விற்பனை செய்யப்படும் என கூறுவதாக புகார் எழுந்துள்ளது.

மக்கள் கூறியதாவது:

தற்போது, 100, 500, 1,000, 5,000 மற்றும் 10,000 ரூபாய்க்கு முத்திரைத்தாள் விற்கப்படுகிறது. அதில், 100 ரூபாய் முத்திரைத்தாள், 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விடுமுறை நாட்களில், 150 ரூபாய்க்கு, பணி நாட்களை குறிப்பிட்டு முன்தேதியிட்டு முத்திரைத்தாள் விற்கப்படுகிறது.

அதிலும், சில தேவைகளுக்கு நான்கு முத்திரைத்தாள்கள் வரை பயன்படுத்த வேண்டி இருந்தால், அதற்கு 200 ரூபாய் கூடுதலாக அளிக்க வேண்டியுள்ளது. இதற்கான தனி தாசில்தார் (முத்திரைத்தாள்) அல்லது கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தை உள்ளடக்கிய டி.ஆர்.ஓ. (முத்திரைத்தாள்) முறையாக ஆய்வு செய்து, நியாயமான விலைக்கு முத்திரைத்தாள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

விற்பனையாளர்கள் கூறுகையில், 'கருவூலத்துறையில் கமிஷன் பெற்றுக் கொண்டே முத்திரைத்தாள்கள் அளிக்கின்றனர். கமிஷன் தர மறுத்தால், அலைகழிப்புக்கு உள்ளாக நேரிடும். அதனை ஈடுகட்டும் வகையில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது.

அதேபோல, சிலர், கடை வாடகை, கம்ப்யூட்டர் பயன்பாடு, மின் கட்டணத்தை சுட்டிக்காட்டியும் கூடுதல் விலைக்கு முத்திரைத்தாளை விற்பனை செய்கின்றனர்,' என்றனர்.






      Dinamalar
      Follow us