/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாமல் அலட்சியம் பொதுமக்கள் அதிருப்தி
/
அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாமல் அலட்சியம் பொதுமக்கள் அதிருப்தி
அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாமல் அலட்சியம் பொதுமக்கள் அதிருப்தி
அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாமல் அலட்சியம் பொதுமக்கள் அதிருப்தி
ADDED : அக் 07, 2025 12:32 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டத்தரசி நகர், சக்தி நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட மேம்படுத்தாமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
குடியிருப்பு பகுதியில் குடிநீர் முறையாக வழங்குவதில்லை. இதனால், குடிநீருக்காக அலைமோத வேண்டிய நிலை உள்ளது.குப்பை ஆங்காங்கே தேங்கி சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குப்பை அகற்ற துாய்மை பணியாளர்கள் வருவதில்லை.
பொது குப்பை குழியில் கழிவுகள் அதிகளவு தேங்கி அகற்றப்படாமல் உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. சுகாதாரம் பாதிக்கப்பட்டதால், இப்பகுதியில் வசிப்போருக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுகின்றன.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. மக்களின் கோரிக்கைக்கு ஊராட்சி நிர்வாகம் செவி சாய்க்காமல் அலட்சியம் காட்டுகிறது.
மேலும், வஞ்சியாபுரம் பிரிவு முதல் நாட்டுக்கல்பாளையம் வரை தார்சாலை மோசமாக உள்ளதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இது குறித்து கடந்த, 2023ம் ஆண்டு சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. முதல்வர் தனிப்பிரிவுக்கும் மனு கொடுத்துள்ளோம்.
இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால், வஞ்சியாபுரம் பிரிவு முதல், நாட்டுக்கல்பாளையம் வரை உள்ள அனைத்து பொதுமக்களும் சேர்ந்து, பிரச்னையை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் அமைதி ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு, கூறினர்.