/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்வாயில் கழிவுநீர் பொதுமக்கள் அதிருப்தி
/
கால்வாயில் கழிவுநீர் பொதுமக்கள் அதிருப்தி
ADDED : ஜன 06, 2026 08:46 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர், சாக்கடை கால்வாய்க்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சியில், குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வீட்டு இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுதல், குழிகள் சேதமடைதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
அதில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து, சாக்கடை கால்வாய்க்கு கழிவுநீர் திருப்பி விடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் அவ்வப்போது ரோட்டில் வழிந்தோடியது. இதற்கு நிரந்தர தீர்வு காணப்படாமல், கழிவுநீர், கால்வாய் பகுதிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
அதில், கழிவுநீர் அதிகளவு வெளியேறுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

