/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேல்நிலை தொட்டி கட்ட பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
மேல்நிலை தொட்டி கட்ட பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 22, 2024 09:01 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, தேவராயபுரம் ஊராட்சியில் தண்ணீர் தொட்டி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, தேவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, தேவராயபுரம் மற்றும் நல்லிக்கவுண்டன்பாளையம் கிராமங்களில், 1,700க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த இரு கிராமங்களிலும், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி வாயிலாக மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த இரு மேல்நிலை தொட்டியும் இடியும் நிலையில் இருந்ததால், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த, 7 மாதங்களுக்கு முன் தண்ணீர் தொட்டி இடிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை இரு கிராமங்களிலும் புதிதாக மேல்நிலை தொட்டி கட்டப்படவில்லை. இதனால் தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னையை போக்கும் வகையில், இரண்டு கிராமங்களுக்கும், போர்வெல் தண்ணீர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இதில், மேடாக உள்ள ஒரு சில பகுதிகளில் குறைவான தண்ணீரும், மற்ற இடங்களில் தண்ணீர் வராமலும் உள்ளது. இதனால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
தற்போது, கோடை காலம் துவங்குவதால், தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் இப்பகுதிகளில் மேல் நிலை தொட்டி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.