/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓடை தண்ணீர் பெருக்கெடுப்பதால் பொதுமக்கள் சிரமம்; கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகங்கள்
/
ஓடை தண்ணீர் பெருக்கெடுப்பதால் பொதுமக்கள் சிரமம்; கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகங்கள்
ஓடை தண்ணீர் பெருக்கெடுப்பதால் பொதுமக்கள் சிரமம்; கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகங்கள்
ஓடை தண்ணீர் பெருக்கெடுப்பதால் பொதுமக்கள் சிரமம்; கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகங்கள்
ADDED : டிச 28, 2024 12:13 AM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நடந்து செல்லும் பாதையில் ஓடை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சாந்திமேடு பகுதியில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் தர்ஷன் அவென்யூ, ஐஸ்வர்யா கார்டன், மல்லிகை கார்டன், தி நியூ டவுன், சித்ரா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
அந்த குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை முழுவதும் மேடும், பள்ளமாக, குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவு கொடுமையான பாதையாக உள்ளது என, இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
இந்த குடியிருப்புகளுக்கு பின்புறம் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் குட்டை உள்ளது. மழைக்காலத்தில் பெருகும் மழை நீர், மலையில் இருந்து சிற்றோடைகள் வழியாக இக்குட்டையில் தேங்குகிறது. அவை நிரம்பி, குடியிருப்புகளுக்கு செல்லும் பாதையில் வழிந்து ஓடுகிறது. இதனால் இப்பாதையை பொதுமக்கள் மழைக்காலத்திலும், அதை தொடர்ந்து சில மாதங்கள் வரையில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ' தர்ஷன் அவின்யூவுக்கு செல்லும் பாதையின் வலது புறம் உள்ள பகுதி பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்டது. இடதுபுறம் எண். 4 வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்டது. தர்ஷன் அவின்யூவுக்கு செல்லும் பாதை வீரபாண்டி பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. பேரூராட்சி நிர்வாகத்திடம் இப்பாதையில் தார்சாலை அமைத்து தரும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய குழியை சரிவர மூடாததால், ஏற்கனவே மேடு, பள்ளங்களாக இருந்த பாதை மேலும் பழுதாகி உள்ளது' என்றனர்.

