UPDATED : மே 31, 2026 03:08 PM
ADDED : மே 31, 2026 02:20 PM
அ நிறம் | அளவு
போத்தனூர்: சுந்தராபுரம் அருகேயுள்ள அருள் கார்டனில், பல் சமய நல்லுறவு இயக்கம் மற்றும் அருள் கார்டன் பொதுமக்கள் சார்பில், பொது நூலகம் கட்டப்பட்டது. மே 31, பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபி தலைமையில், அமைச்சர் விக்னேஷ் திறந்து வைத்தார். இயக்க ஒருங்கிணைப்பாளர் ராமசாமி, மாவட்ட செயலாளர் பூபேஷ் முன்னிலை வகித்தனர்.
அருள் கார்டன் சங்க தலைவர் ஜார்ஜ், செயலாளர் சஞ்சய்காந்தி, பொருளாளர் ரத்தின சபாபதி, குடியிருப்போர் பங்கேற்றனர்.
