/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குரங்கு நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி
/
குரங்கு நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி
ADDED : அக் 02, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கதிர்நாயக்கன் பாளையம் அருகே உள்ள ரேணுகாபுரம் குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக குரங்கு ஒன்று சுற்றி வருகிறது.
மளிகை மற்றும் பெட்டிக்கடையின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை எடுத்துச் செல்கிறது. துரத்தும் நபர்களை கடிக்க வருவதால், இக்குரங்கை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோவை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.