/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுமக்கள் தொடர்பு முகாம்; கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
/
பொதுமக்கள் தொடர்பு முகாம்; கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
பொதுமக்கள் தொடர்பு முகாம்; கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
பொதுமக்கள் தொடர்பு முகாம்; கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
ADDED : டிச 12, 2024 11:33 PM
கோவை; மாநிலம் முழுதும் பொதுமக்கள் தொடர்பு முகாம்களை, மக்கள் பிரதிநிதிகள் தலைமையில் நடத்த, கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, ஒரு மாதத்திற்குள்தீர்வு காண வேண்டும் என, அதிகாரிகளுக்கு தலைமை செயலர் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அடுத்து, அரசு திட்டங்களில் பயன் பெற விரும்பும் மக்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, மாநிலம் முழுதும் மக்கள் தொடர்பு முகாம்களை நடத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கலெக்டர்கள் கவனிக்க வேண்டும். இதில், அமைச்சர்கள், தொகுதிஎம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முகாம்களை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். நிலுவையில் உள்ள திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வை விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

