/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்
/
கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்
ADDED : ஏப் 29, 2025 09:18 PM
வால்பாறை; வால்பாறையில், மே 14ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
வால்பாறை தாசில்தார் மோகன்பாபு அறிக்கை வருமாறு: வால்பாறை நகராட்சி சமுதாய நலக்கூடத்தில், மே 14ம் தேதி, மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இதற்காக, மே 2ம் தேதி காலை, 11:00 மணி முதல் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகின்றன.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தின் வாயிலாக விசாரணை மேற்க்கொள்ளப்பட்டு, மேற்படி மனுக்கள் மீது மே 14ல் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் தீர்வு காணப்படும்.
மேலும், முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்குகிறார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.