/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்; அரசு ஊழியர்கள் பிரசாரம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்; அரசு ஊழியர்கள் பிரசாரம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்; அரசு ஊழியர்கள் பிரசாரம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்; அரசு ஊழியர்கள் பிரசாரம்
ADDED : பிப் 18, 2025 10:13 PM
அன்னுார்; பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 25ம் தேதி நடைபெற உள்ள மறியல் குறித்து அன்னுாரில் பிரசாரம் நடந்தது.
பங்கேற்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சம்பள முரண்பாட்டை களைய வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம் பெறுவோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஜாக்டோ- ஜியோ' அமைப்பு சார்பில் வருகிற 25-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த பிரசாரம் அன்னுாரில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இணைந்துள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் பிரச்சாரம் செய்தனர்.
இதில் முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஊர் புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும்.
அரசு துறையில் காலியாக உள்ள 30 சதவீத காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெறும்,' என்றனர்.
அன்னுார் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் கோரிக்கை விளக்க பிரசுரங்களை விநியோகித்தனர்.

