/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசுப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணிகள்
/
அரசுப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணிகள்
ADDED : அக் 03, 2025 09:48 PM
கோவை; நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் சிறப்பு முகாம், நாயக்கன்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
எழுத்தறிவு கற்பித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், இளைஞர்களின் சமுதாய பங்கு, சேமிப்பின் முக்கியத்துவம், இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, போதை எதிர்ப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றன.
மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. நடைபாதை சீரமைப்பு, பள்ளி பூங்கா, காய்கறி மற்றும் மூலிகைத் தோட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட் டன. மரக்கன்று நடும் பணியில், மாணவர்கள் ஈடுபட்டனர்.
பள்ளி தலைமையாசிரியர் இளமுருகன், நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் சங்கர், திட்ட அலுவலர், தன்னார்வ தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.