/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் தலை சேகரிப்பு கண்காட்சி பொதுமக்கள், மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு
/
தபால் தலை சேகரிப்பு கண்காட்சி பொதுமக்கள், மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு
தபால் தலை சேகரிப்பு கண்காட்சி பொதுமக்கள், மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு
தபால் தலை சேகரிப்பு கண்காட்சி பொதுமக்கள், மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு
ADDED : நவ 11, 2024 04:24 AM
கோவை,: 'கோவையில் நடக்கும் தபால் தலை சேகரிப்பு கண்காட்சியில், பொதுமக்கள், மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்க வேண்டும்' என அழைப்பு விடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட அளவிலான, 'கோவை பெக்ஸ் 2024', தபால் தலை சேகரிப்பு கண்காட்சி, நாளை மற்றும் நாளை மறுநாள், அவிநாசி ரோடு, சுகுணா திருமண மண்டபத்தில் நடக்கிறது.
கண்காட்சியில், பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள தபால் தலைகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்கள் காட்சிப் படுத்தப்பட உள்ளன. நாளை (12ம் தேதி), சிறப்பு தபால் உறை, புகைப்பட தபால் அட்டை, என் தபால் தலை ஆகியவை வெளியிடப்படுகின்றன. பள்ளி குழந்தைகளுக்கான கடிதம் எழுதும் போட்டி, மாயா ஜால நிகழ்ச்சி, கடிதப் பரிமாற்றம் பயிலரங்கு அஞ்சல் ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
நாளை மறுநாள் (13ம் தேதி), பள்ளி குழந்தைகளுக்கான வினாடி-வினா, ஓவியப் போட்டி, பரிசு வழங்குதல் ஆகியவை நடக்கின்றன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பங்கேற்கிறார். தபால் துறையின் மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சரவணன், மேற்கு மண்டல இயக்குனர் அகில் நாயர், கோவை தபால் கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கர், ஆர்.எம்.எஸ்., கோவை கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகின்றனர்.
அனுமதி இலவசம்
கோவை தபால் கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சிவசங்கர் கூறியதாவது:
கண்காட்சியில் மொத்தம், 150 பிரேம்களில், தபால் தலைகள் வைக்கப்பட உள்ளன. இதில் சிறப்பான பங்களிப்புக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. அனுமதி இலவசம். 12ம் தேதி (நாளை) இரவு 8:00 மணி வரையும், 13ம் தேதி மாலை 6:00 மணி வரையும் கண்காட்சியை காணலாம்.
தபால் தலையின் பின்னணியில் இருக்கக் கூடிய வரலாறு முழுமையாக அறிந்துக் கொள்ள, இந்த கண்காட்சி சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
குழந்தைகளுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. கண்காட்சியில், பொதுமக்கள், மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, சிவசங்கர் கூறினார்.