/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் அவதி
/
ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் அவதி
ADDED : ஜூன் 15, 2025 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் தலைமை தபால் அலுவலகம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.இந்த அலுவலகங்களுக்கு வருவோர் வாகனங்களை சாலையோரம் நிறுத்த முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் வருவதால் இச்சாலையில் அதிக அளவிலான வாகனங்கள் செல்கின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.