/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிற்காத அரசு பஸ்களால் பொது மக்கள் தவிப்பு
/
நிற்காத அரசு பஸ்களால் பொது மக்கள் தவிப்பு
ADDED : மே 21, 2025 11:28 PM
அன்னுார்; கஞ்சப்பள்ளியில் அரசு பஸ்கள் நிறுத்தப்படாததால் மக்கள் தவிக்கின்றனர்.
அன்னுார், அவிநாசி சாலையில், கஞ்சப்பள்ளி பிரிவிலிருந்து ஒரு கி.மீ., தொலைவில் கஞ்சப்பள்ளி உள்ளது.இங்கு 600 குடும்பங்கள் வசிக்கின்றன. கஞ்சப்பள்ளி, ருத்திரியம் பாளையம், நீலகண்டன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 200க்கும் மேற்பட்டோர் அவிநாசி மற்றும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர்.
மாணவ, மாணவியர் அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், பலர் அன்னுாரில் இருந்து கோவைக்கு கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர்.
எனினும் சில மாதங்களாக பெரும்பாலான அரசு பஸ்கள் கஞ்சப்பள்ளி பிரிவு பஸ் ஸ்டாப்பில் நிறுத்துவதில்லை.
திருப்பூர் அல்லது அவிநாசியில் ஏறும்போது, கருவலூர் அல்லது அன்னுாரில் இறங்கிக் கொள்ளுங்கள். கஞ்சப்பள்ளி பிரிவில் பஸ் நிக்காது என்று கூறுகின்றனர்.
இதனால் நீண்ட நேரம் காத்திருந்து எந்த பஸ் நிறுத்திச் செல்லுமோ அந்த பஸ்ஸில் ஏறி கஞ்சப்பள்ளி செல்கின்றனர். அதேபோல் கஞ்சப்பள்ளி பிரிவில் நீண்ட நேரம் காத்திருந்த பிறகே அன்னுார் அல்லது அவிநாசி செல்ல முடிகிறது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக பணிமனையில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என கஞ்சப்பள்ளி பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதனால் உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடிவதில்லை. பள்ளி கல்லூரிகளுக்கும் செல்ல முடிவதில்லை என புகார் தெரிவிக்கின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.