ADDED : ஜன 26, 2026 05:15 AM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே டிரான்ஸ்பார்மர் பிரச்னையால், பல மணி நேரம் மின்சாரம் இன்றி மக்கள் பரிதவித்தனர்.
பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதியில், 500கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மரில், மின் பிரச்னை ஏற்பட்டு, நேற்று மதியம் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள், மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மின் பணியாளர்கள் டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் மீண்டும் மீண்டும், மின் பிரச்னை ஏற்பட்டதால், இரவு வரை பிரச்னைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து, தொடர்ந்து சரி செய்யும் பணியில், பணியாளர்கள் ஈடுபட்டனர்.
