/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெரு விளக்கு இல்லாமல் பொதுமக்கள் அவதி
/
தெரு விளக்கு இல்லாமல் பொதுமக்கள் அவதி
ADDED : ஜூலை 29, 2025 08:31 PM
சூலுார்; தெரு விளக்கு இல்லாததால், சூலுார் டாக்டர்ஸ் காலனி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சூலுார் பேரூராட்சி, 14 வது வார்டுக்கு உட்பட்டது டாக்டர்ஸ் காலனி. இங்கு, ஏராளமான வீடுகள் உள்ளன.
இப்பகுதிக்கு செல்லும் வீதியில், பாதி தூரத்துக்கு மட்டுமே மின் விளக்குகள் உள்ளன. மீதி இடங்களில் மின் விளக்குகள் இல்லாததால், இருள் சூழ்ந்து உள்ளது. இதனால், மக்கள் அப்பகுதியை கடந்து செல்ல அச்சப்பட வேண்டிய சூழல் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
சூலுார் பேரூராட்சிக்கு உட்பட்டது எங்கள் குடியிருப்பு பகுதி. சுகந்தி நகரில் இருந்து எங்கள் பகுதிக்கு செல்லும் தெருவில், பாதி தூரத்துக்கு மின் விளக்குகள் இல்லை.
இதனால், அப்பகுதி முழுக்க இருள் சூழ்ந்து உள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களால் பாதிப்பும், சமூக விரோதிகளால் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இரவில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அந்த இடத்தை கடந்து நடந்து வர முடியாமல் அச்சப்படுகின்றன. பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், எங்கள் அவதி தொடர்கிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.