/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சந்தை அருகே ஆக்கிரமிப்பு; நெரிசலால் திணறும் பொதுமக்கள்
/
சந்தை அருகே ஆக்கிரமிப்பு; நெரிசலால் திணறும் பொதுமக்கள்
சந்தை அருகே ஆக்கிரமிப்பு; நெரிசலால் திணறும் பொதுமக்கள்
சந்தை அருகே ஆக்கிரமிப்பு; நெரிசலால் திணறும் பொதுமக்கள்
ADDED : ஆக 26, 2025 10:12 PM
குடிமங்கலம்; பெதப்பம்பட்டி வாரச்சந்தையன்று ரோட்டோரத்தில் அமைக்கப்படும் கடைகளால், செஞ்சேரிமலை ரோட்டில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி ஊராட்சி பெதப்பம்பட்டியில், ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில், முன்பு வாரச்சந்தை நடைபெற்று வந்தது.
தொடர் கோரிக்கைக்குப்பிறகு, இச்சந்தைக்கு, நிரந்தர கட்டடம், 40 லட்சம் ரூபாய் அரசு நிதியில் கட்டப்பட்டது. தற்போது வாரந்தோறும் வியாழக்கிழமையன்று, இச்சந்தை கூடுகிறது.
சந்தை வளாகத்திலுள்ள கடைகள் மட்டுமல்லாது, செஞ்சேரிமலை ரோட்டின் இருபுறங்களிலும் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். பெதப்பம்பட்டி நால்ரோட்டில் இருந்து வாரச்சந்தை தாண்டி குறிப்பிட்ட துாரத்துக்கு, இவ்வாறு அமைக்கப்படும் கடைகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
குறுகலான இடத்தில், இந்த கடைகளை அமைப்பதால், செஞ்சேரிமலை மற்றும் இதர வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் அப்பகுதியை கடக்க திணறுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பொருட்களை வாங்குபவர்களும் வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்திக்கொள்வதால், விபத்துகள் ஏற்படுகிறது.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைக்கப்படும் கடைகள் குறித்து, நெடுஞ்சாலைத்துறை, குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.