/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மணியகாரன்பாளையத்தில் சாக்கடையுடன் பொது கழிப்பிட கழிவு 'மிக்சிங்'
/
மணியகாரன்பாளையத்தில் சாக்கடையுடன் பொது கழிப்பிட கழிவு 'மிக்சிங்'
மணியகாரன்பாளையத்தில் சாக்கடையுடன் பொது கழிப்பிட கழிவு 'மிக்சிங்'
மணியகாரன்பாளையத்தில் சாக்கடையுடன் பொது கழிப்பிட கழிவு 'மிக்சிங்'
ADDED : ஜூலை 08, 2025 10:03 PM
கோவை; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நேற்று நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் சார்ந்த, 74 மனுக்களை பொது மக்கள் அளிக்க, துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
தமிழக வெற்றி கழகத்தினர் அளித்த மனுவில், 'மாநகராட்சி, 19வது வார்டு மணியகாரன்பாளையத்தில் உள்ள மாணிக்கவாசகர் நகரில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடையில் கலக்கிறது.சாக்கடையும் சுத்தம் செய்யப்படாததால், கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள் பயணிக்கும் விதமாக, மினி பஸ் போக்குவரத்து வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.
ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் மனுவில், 'காலை, 6:00 மணிக்கே துாய்மை பணிகள் மேற்கொள்ளுமாறு பணி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் பணிக்கு வரும் சமயத்தில் விபத்துகள் ஏற்படும் அபாயமுள்ளது. ஏற்கனவே, இதுபோன்ற விபத்துகளும் நடந்துள்ளன. எனவே, பணி நேரத்தை, 7:00 மணிக்கு மாற்றியமைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.