/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க பொதுமக்கள் வலியுறுத்தல்
/
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 20, 2025 04:23 AM
வால்பாறை : வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். இடநெருக்கடியில் சிக்கி மக்கள் அவதிப்படுகின்றனர்.
வால்பாறை நகரை சுற்றியுள்ள பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தை தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள் ஆக்கிரமித்து, தேயிலை பயிரிட்டுள்ளனர். இதனால், வால்பாறை நகரை விரிவுபடுத்த முடியாத நிலை உள்ளது. மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறையை விரிவுபடுத்த வேண்டுமானால், ஆக்கிரமிப்பு நிலங்களை பாரபட்சமின்றி மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகரில் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கிறோம். சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் நிலையில், நகரப் பகுதி விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. எனவே, தமிழக அரசு, மாவட்ட கலெக்டர் தலைமையில் தனிக்குழு அமைத்து, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, வால்பாறை நகரை விரிவுபடுத்த வேண்டும். எஸ்டேட் தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில், நகரில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.