/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடையூறாக உள்ள மின்கம்பிகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
/
இடையூறாக உள்ள மின்கம்பிகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
இடையூறாக உள்ள மின்கம்பிகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
இடையூறாக உள்ள மின்கம்பிகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 05, 2024 12:27 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. குரும்பபாளையம் பெரியார் நகர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
குரும்பபாளையம் பெரியார் நகரில் அரசு பட்டா வழங்கியது. இங்கு, தற்போது வீடு கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மின் கம்பி மற்றும் மின்கம்பம் பட்டா நிலத்தையொட்டி செல்வதால், பணிகள் மேற்கொள்ள முடியாமல் இரண்டு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, இந்த மின்கம்பி மற்றும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லுார் மக்கள் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட நல்லுாரில், கடந்த, 1960ம் ஆண்டில் இருந்து வசிக்கும் மக்களுக்கு, முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையிலும், அப்போதைய சப் - கலெக்டர் ரவிக்குமார் முன்னிலையிலும் கடந்த 2019ம் ஆண்டு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. தற்போது, ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாகவும், பலர் வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும் வாழ்கிறோம். சர்வே எண்ணில் உள்ள காலி நிலத்தில் பட்டியலில் உள்ள நபர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு, வலியுறுத்தியுள்ளனர்.

