/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அழுக்குச்சாமியார் கோவிலில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்
/
அழுக்குச்சாமியார் கோவிலில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்
அழுக்குச்சாமியார் கோவிலில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்
அழுக்குச்சாமியார் கோவிலில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்
ADDED : பிப் 12, 2024 12:38 AM

ஆனைமலை:ஆனைமலை அருகே, அழுக்குச்சாமியார் கோவிலில் புதுச்சேரி முதல்வர் தரிசனம் செய்தார்.
ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதுார் அழுக்குச்சாமியார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அழுக்குச்சாமியார் கோவிலுக்கு அவ்வப்போது வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை, 5:30 மணிக்கு கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனைமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.