/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இழு...இழுவென இன்னும் இழுக்கிறது! எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பால பணி
/
இழு...இழுவென இன்னும் இழுக்கிறது! எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பால பணி
இழு...இழுவென இன்னும் இழுக்கிறது! எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பால பணி
இழு...இழுவென இன்னும் இழுக்கிறது! எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பால பணி
ADDED : நவ 09, 2024 11:43 PM

கோவை: கடந்த ஆக., மாதம் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த, கோவை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலப் பணி, இன்னும் இழுபறியாக இழுத்துக் கொண்டிருக்கிறது.
சிங்காநல்லுார் அருகே ஒண்டிப்புதுாரில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ்., காலனிக்குச் செல்ல, 2013ல், 27 துாண்களுடன் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை (நபார்டு) துவக்கியது. அணுகுசாலைக்கு போதிய இடம் ஒதுக்காமல், 30 அடி அகலத்துக்கு மேம்பாலம் கட்ட ஆரம்பித்ததால், அப்பகுதி பொதுமக்கள், ஐகோர்ட்டுக்குச் சென்றனர். இதனால், மேம்பால வேலை பாதியில் நின்றது.
அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு கட்டமாக பேச்சு நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இம்மேம்பாலம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது; 2021ல் தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டத்துக்கு உயிரூட்டப்பட்டது. நில உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி, இழப்பீடு வழங்கப்பட்டது.
ஓடுதளத்தில் மூன்று 'டெக் ஸ்லாப்', ஒண்டிப்புதுார் பகுதியில் தடுப்பு சுவர் மற்றும் ஒண்டிப்புதுார் மற்றும் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி செல்லும் வழித்தடத்தின் இருபுறமும் தலா, 75 மீட்டர் நீளத்துக்கு அணுகு சாலை மற்றும் சேவைச்சாலை, நடைபாதையுடன் கூடிய வடிகால் அமைக்க, ரூ.8.80 கோடி ஒதுக்கப்பட்டது.
மூன்று 'டெக் ஸ்லாப்' அமைத்தல், ரோட்டின் இருபுறம் மழை நீர் வடிகால் கட்டும் பணி முடிந்து விட்டது. டிரான்ஸ்பார்மரை வேறிடத்துக்கு மாற்றியமைத்து, மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதைவடமாக கொண்டு செல்ல வேண்டும். 'டிரான்ஸ்பார்மரை' மாற்றியமைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், இன்னும் மின் கம்பங்கள் அகற்றப்படவில்லை.
இப்பணியை முடித்தால் மட்டுமே அணுகு சாலை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு மாற்று வழித்தடம் உருவாக்க முடியும். அதன்பிறகே , 'ரேம்ப்' கட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது. 'ரேம்ப்' கட்டுவதற்கு மூன்று மாதமாகும். முதலில், அணுகு சாலை அமைப்பதற்கான பணிகளில், மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியை ஆக., மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது; ஒப்பந்ததாரர் மிகவும் தாமதமாக செய்து வருவதாக குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
முதலில் சர்வீஸ் ரோடு
டிரான்ஸ்பார்மர் மாற்றியமைக்கப்பட்டு, இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது; மின் கம்பங்களுக்கான இணைப்பை துண்டித்து அகற்றினால், அணுகுசாலை அமைக்க முடியும். 'ரேம்ப்' கட்ட குழி தோண்டினால், குடியிருப்புவாசிகள் பயன்படுத்த முடியாத சூழல் இருக்கிறது. அவர்களுக்கு 'சர்வீஸ்' ரோடு போட்டுக் கொடுத்து விட்டு, 'ரேம்ப்' பணி துவக்க முடிவு செய்திருக்கிறோம். ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளிலும், வேலை செய்ய முடிவதில்லை. தனியார் பள்ளி மாணவர்களும் பாலம் பகுதி வழியாக செல்ல வேண்டியிருக்கிறது; அவர்களுக்கான வசதியும் செய்து கொடுக்க வேண்டியுள்ளது.
--- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்