/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுரையீரல் மருத்துவத்துறை அல்ட்ரா சவுண்ட் பயிலரங்கு
/
நுரையீரல் மருத்துவத்துறை அல்ட்ரா சவுண்ட் பயிலரங்கு
நுரையீரல் மருத்துவத்துறை அல்ட்ரா சவுண்ட் பயிலரங்கு
நுரையீரல் மருத்துவத்துறை அல்ட்ரா சவுண்ட் பயிலரங்கு
ADDED : ஜூன் 15, 2025 10:23 PM

கோவை; ஜி.கே.என்.எம்., மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் நுரையீரல் மருத்துவத்துறை சார்பில், மேம்பட்ட அல்ட்ராசவுண்ட் பயிலரங்கம் நடந்தது.
படுக்கையின் அருகில் பரிசோதனை செய்யக்கூடிய கருவியான பெட்சைடு தொராசிக் அல்பராசோனோகிராபி மூலம் நோய் கண்டறிதல், சிகிச்சைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மூத்த நுரையீரல் நிபுணர்கள் மற்றும் அல்ட்ராசவுண்ட் நிபுணர்களால் பயிலரங்கம் நடத்தப்பட்டது. நுரையீரலைச் சுற்றி உருவாகும் திரவம், நுரையீரல் சுவ்வுகளுக்கிடையில் காற்று தேங்குவதால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பயிற்றுவிக்கப்பட்டது.
நுரையீரல் அல்ட்ராசவுண்ட் மற்றும் ஏ.ஐ., துறையில் முன்னோடி ஆராய்ச்சியாளரான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த, டாக்டர் டியூடர் டோமா சிறப்புரையாற்றினார்.
ஜி.கே.என்.எம்., மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் நுரையீரல் மருத்துவ துறையின் தலைவர் டாக்டர் சுந்தரகுமார், இன்டர்வென்ஷனல் நுரையீரல் மருத்துவ நிபுணர் டாக்டர் அரவிந்த் மற்றும் டாக்டர்கள் செந்தில்குமார், ஹரிவிக்னேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.