ADDED : பிப் 19, 2025 10:49 PM

அ நிறம் | அளவு
கோவை; உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
கோவை, உக்கடம், புல்லுக்காடு பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. அதனை சுற்றி செடிகள் வளர்ந்து, காய்ந்து கிடக்கின்றன. இந்நிலையில், நேற்று திடீரென குப்பை கிடங்கில் தீ பற்றியது. அருகில் காய்ந்த செடிகள் இருந்ததால், தீ மளமளவென பரவியது. இதையடுத்து அப்பகுதியினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
