/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஞ்., செயலர் நியமனத்தில் முறைகேடு தலைவருக்கு கலெக்டர் நோட்டீஸ்
/
பஞ்., செயலர் நியமனத்தில் முறைகேடு தலைவருக்கு கலெக்டர் நோட்டீஸ்
பஞ்., செயலர் நியமனத்தில் முறைகேடு தலைவருக்கு கலெக்டர் நோட்டீஸ்
பஞ்., செயலர் நியமனத்தில் முறைகேடு தலைவருக்கு கலெக்டர் நோட்டீஸ்
ADDED : ஜன 19, 2024 11:42 PM
பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றியத்தை சேர்ந்த ரமணமுதலிபுதுார் ஊராட்சி செயலர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து விளக்கம் அளிக்க கோரி தலைவருக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் நோட்டீஸ் வழங்கினார்.
நோட்டீசில் கூறியிருப்பதாவது:
ரமணமுதலிபுதுார் ஊராட்சி தலைவர் தனபாக்கியம், ஊராட்சி செயலர் காலியிடத்தை நிரப்ப பொது பிரிவுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கை செய்தார். 2021ல் நடந்த நேர்காணலில், 76 பேர் பங்கேற்றனர்.
அதில், தேர்வு செய்யப்பட்ட விஜயலட்சுமிக்கு, ஊராட்சி தலைவரால் பணியாணை வழங்கப்பட்டுள்ளது. பணியாணை வழங்கப்பட்டுள்ள விஜயலட்சுமி, 1997ல் பிறந்தார். பொதுப்பிரிவில் விண்ணப்பிக்கும் போது இவரின் வயது, 34 ஆண்டுகள், ஐந்து நாட்களாகும்.
வயது வரம்பை மீறிய ஒருவரை, ஊராட்சி தலைவர் ஒரு தலைபட்சமாக தேர்வு செய்தது தெரிய வருகிறது. இத்தேர்வானது விதிமுறைகளை மீறி நியமனம் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.
எனவே, ரமணமுதலிபுதுார் ஊராட்சி தலைவர் மீது ஏற்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு இந்த அறிவிப்பு கிடைத்த, 15 நாட்களுக்குள் விளக்கத்தை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடு இல்லை
ஊராட்சி தலைவர் தனபாக்கியம் கூறுகையில், ''ஊராட்சி செயலர் நியமனத்தில் முறைகேடு என்று கூறுவது தவறாகும். முறைகேடு எதுவும் நடக்கவில்லை.
ஒன்றிய அதிகாரிகள் தான் நேர்காணல் செய்து விண்ணப்பங்களை சரிபார்த்தனர். விண்ணப்பம் சரியாக இருந்ததால் கையெழுத்து மட்டுமே போட்டேன். இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு விளக்கம் அளிக்க உள்ளேன்,'' என்றார்.