ADDED : நவ 09, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சாய்பாபா காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 29. மாவட்ட விலங்குகள் வதைத்தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர். கடந்த, 7ம் தேதி இவரை விளாங்குறிச்சி சிவதங்கம் நகரை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டனர். வாலிபர் ஒருவர் அப்பகுதியில் இருந்த இரு நாய்க்குட்டிகளை, கல்லால் அடித்துக் கொன்றதாக தெரிவித்தனர்.
பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் அங்கு அப்பகுதியில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். அதில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி, சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார்.
வழக்கு பதிந்த போலீசார் விசாரித்தனர். அதில் அதேபகுதியை சேர்ந்த விஷ்ணு, 31 என்பவர் நாய்களை கல்லால் தாக்கி கொலை செய்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

