/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோதண்டராமர் கோவிலில்புரந்தரதாசர் ஆராதனை நிகழ்ச்சி
/
கோதண்டராமர் கோவிலில்புரந்தரதாசர் ஆராதனை நிகழ்ச்சி
ADDED : ஜன 30, 2025 11:38 PM

கோவை: ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் நேற்று புரந்தரதாசர் ஆராதனை நிகழ்ச்சி நடந்தது.
ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானத்தில் உள்ள அபிநவ வித்யாதீர்த்த பிரவச்சன மண்டபத்தில் பி.என்.ராகவேந்திரராவ் நினைவு அறக்கட்டளை சார்பில் புரந்தரதாசர் ஆராதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் சங்கீத வித்யாநிதி வித்யாபூஷனா குழுவினர் புரந்தரதாசர் கீர்த்தனைகளை பாடினர். பக்கவாத்தியங்களாக அனிருத் பட்டின் மிருதங்க இசையும், பிரதேஷ் ஆச்சர்யாவின் வயலின் இசையும், ரகுநாதனின் கடம் இசையும் அரங்கை அதிர வைத்தது.
பாடகர் வித்யாபூஷனா தொடர்ந்து புரந்தரதாசரின் கீர்த்தனைகளை பாடினார். திரளான கர்நாடக இசை ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.