/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருமாள் கோவில்களில் நாளை புரட்டாசி திருவிழா
/
பெருமாள் கோவில்களில் நாளை புரட்டாசி திருவிழா
ADDED : செப் 26, 2024 11:40 PM
அன்னுார் : அன்னுார் வட்டாரத்தில், பெருமாள் கோவில்களில், நாளை புரட்டாசி திருவிழா நடக்கிறது.
மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படும் மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், நாளை அதிகாலை 4:00 மணிக்கு, மகா அபிஷேகமும், திருமஞ்சனமும் நடக்கிறது. காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, அச்சம்பாளையம் செல்வ விநாயகர் குழுவின் இசை கச்சேரி நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு அவிநாசி அபிநயா அகாடமியின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.
அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவில், வரதையம்பாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், பொகலூர், பொங்கலூர், கஞ்சப்பள்ளி உள்ளிட்ட ஊர்களில் உள்ள பெருமாள் கோவில்களில் நாளை காலை அபிஷேக பூஜை நடக்கிறது.