/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோதண்டராமர் கோவிலில் புரட்டாசி திருவிழா
/
கோதண்டராமர் கோவிலில் புரட்டாசி திருவிழா
ADDED : அக் 13, 2025 12:24 AM

மேட்டுப்பாளையம்:சிறுமுகை கோதண்டராமர் கோவிலில் புரட்டாசி திருவிழா நடந்தது.
சிறுமுகைபுதூரில் தேவாங்க சமுதாயத்திற்கு உட்பட்ட, சீதா லட்சுமண சமேத கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கடைசி வாரத்தில் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு கடந்த 11ம் தேதி இரவு பவானி ஆற்றில் இருந்து, கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்தனர். இரவு சிறுமுகைப்புதூர் வீரக்குமாரர்கள் கத்தி போட்டு, சக்தி சாமுண்டீஸ்வரி சுவாமியை அழைத்து வந்தனர். நள்ளிரவு அழகு சேவை பூஜையும், கிராம தேவதை பூஜையும், நீலகிரி ரங்கராமருக்கு கவாளம் கொடுத்தல் பூஜையும் நடந்தது.
நேற்று மதியம் அபிஷேக அலங்கார பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ராமர் கோவில் பஜனை குழுவினர் மற்றும் சுற்றுவட்டார பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. மாலையில் குதிரை வாகனத்தில் கோதண்ட ராமர் சுவாமி எழுந்தருளி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று மதியம் உச்சிக்கால பூஜையும், அபிஷேக, அலங்கார பூஜையும் நடைபெற உள்ளது. மாலையில் கன்னட நகைச்சுவை வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 14ம் தேதி முனியப்பன் பூஜையும், 18ம் தேதி பஜனை பூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் தேவாங்க சமுதாய நல அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.