/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாட்டைவார் சுவாமிகள் 47வது ஆண்டு குருபூஜை விழா
/
சாட்டைவார் சுவாமிகள் 47வது ஆண்டு குருபூஜை விழா
ADDED : அக் 13, 2025 12:23 AM

சூலுார்:வேலப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த சாட்டைவார் சுவாமிகளின், குரு பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சுல்தான்பேட்டை அடுத்த வேலப்ப நாயக்கன் பாளையத்தில், சாட்டை வார் சுவாமிகளின், 47ம் ஆண்டு குரு பூஜை விழா நடந்தது.
வடலுார் மேட்டுக்குப்பம் ராமலிங்க வள்ளலார் சர்வதேச தர்ம பரிபாலன அறக்கட்டளை நிறுவனர் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் தலைமை வகித்தார். ஆசிரியர் ரத்னம் வரவேற்றார்.
வாலி பாளையம் அருள் நந்தி முகவாண்மை சொல்லருவி ஆனந்த கிருஷணன் பேசுகையில், ஆன்மீகம், அன்பு மேம்பட துறவியர்கள் வழிகாட்டல் படி நடக்க வேண்டும். துறவியர்கள், சித்தர்கள் வழிபடதக்கவர்கள். இளைய சமுதாயத்துக்கு அவர்களின் போதனைகள் அவசியம் தேவை, என்றார்.
தொடர்ந்து, மகேஷ்வர பூஜை, அன்னம் பாலிப்பு நடந்தது. சதாசிவம் குருபூஜையை நடத்தி வைத்தார். ராமநாதன், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி கார்மேகம் உள்ளிட்டோர் பேசினர்.
சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குரு பூஜை விழாவில் பங்கேற்றனர்.