/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொண்டிபாளையம் கோவிலில் புரட்டாசி திருவிழா துவங்கியது
/
மொண்டிபாளையம் கோவிலில் புரட்டாசி திருவிழா துவங்கியது
மொண்டிபாளையம் கோவிலில் புரட்டாசி திருவிழா துவங்கியது
மொண்டிபாளையம் கோவிலில் புரட்டாசி திருவிழா துவங்கியது
ADDED : செப் 14, 2025 11:14 PM
அன்னுார்; அன்னூர் அருகே உள்ள மொண்டி பாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா நேற்று முன்தினம் (13ம் தேதி) துவங்கியது.
அதிகாலை 5:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதர வெங்கடேச பெருமாளுக்கு மகா அபிஷேகம், திருமஞ்சனம், நடைபெற்றது. காலை 10:00 மணிக்கு பஜனை துவங்கி, மதியம் வரை நடந்தது. பிருந்தாவன இசை நிகழ்ச்சியும் கோவில் வளாகத்தில் நடந்தது.
இரவு 7:45 மணிக்கு கருட வாகனத்தில் வெங்கடேஸ்வரா பெருமாள் திருவீதி உலா தேரோடும் வீதியில் நடந்தது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை வருகிற 20ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பஸ்கள் கோவை, அன்னுார், மேட்டுப்பாளையம், புளியம்பட்டி, அவிநாசியில் இருந்து ஐந்து சனிக்கிழமைகளில் மொண்டிபாளையத்துக்கு இயக்கப்படுகிறது.