/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புரட்டாசி விழா 20ம் தேதி துவக்கம்
/
புரட்டாசி விழா 20ம் தேதி துவக்கம்
ADDED : செப் 01, 2025 10:19 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா, இம்மாதம் 20ம் தேதி துவங்க உள்ளது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமை விழாவும், நவராத்திரி விழாவும் வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்தாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா, இம்மாதம், 20ம் தேதி துவங்க உள்ளது. 21ம் தேதி மஹாளய அமாவாசை விழாவும், 23ம் தேதி நவராத்திரி உற்சவம் விழாவும் துவங்க உள்ளது.
27ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை விழாவும், அக்., முதல் தேதி சரஸ்வதி பூஜையும், 2ம் தேதி விஜயதசமியும், குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, அம்பு போடும் விழா நடைபெற உள்ளது.
4ம் தேதி மூன்றாவது சனிக்கிழமை விழாவும், 11ம் தேதி நான்காம் சனிக்கிழமை விழாவும், 18ம் தேதி ஐந்தாம் சனிக்கிழமை விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.