/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
/
அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
ADDED : செப் 19, 2025 09:21 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை விழா, இன்று (20ம் தேதி) துவங்க உள்ளது.
புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா இன்று, (20ம் தேதி) நடக்கிறது. 23ம் தேதி நவராத்திரி உற்சவம் துவங்குகிறது.
27ம் தேதி புரட்டாசி இரண்டாவது சனிக் கிழமை, அக். 4ம் தேதி மூன்றாவது சனிக்கிழமை, 11ம் தேதி நான்காம் சனிக்கிழமை, 18ம் தேதி ஐந்தாம் சனிக்கிழமை விழா நடைபெற உள்ளது. மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், இன்று அதிகாலை 4:00 மணிக்கு மகாபிஷேகம், திருமஞ்சனம் நடைபெறுகிறது.
ஸ்ரீ பூமிநாளா நாயகி சமேதர திருவேங்கட பெருமாள் குழுவின் பஜனை காலை 10:00 மணிக்கு துவங்கி, மதியம் 1:00 மணி வரை நடைபெறுகிறது. இரவு 7:30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், காலை 5:00 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பொங்கலூர் கரிவரதராஜ பெருமாள் கோவில், கஞ்சப்பள்ளி, பொகலுார், குன்னத்துார் புதுார், காட்டம்பட்டி, வரதையம்பாளையம் பெருமாள் கோவில்களில் இன்று புரட்டாசி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.