/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுத்தையை பிடிக்க கூண்டு வையுங்க!
/
சிறுத்தையை பிடிக்க கூண்டு வையுங்க!
ADDED : செப் 04, 2025 10:53 PM
வால்பாறை; வால்பாறை அடுத்துள்ள சோலையாறு எஸ்டேட் முதல் பிரிவில், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் சிறுத்தை நடமாடுவதை தொழிலாளர்கள் கண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன் ஹரிசுதன்,16, வீட்டின் கதவை திறந்து வெளியே வந்த போது எதிரே சிறுத்தை நிற்பதை கண்டு, அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.
தொழிலாளர்கள் கூறுகையில், 'வால்பாறையில், தொழிலாளர் குடியிருப்பில் சிறுத்தை முகாமிட்டுள்ளது. புதரில் பகல் நேரத்தில் பதுங்கும் சிறுத்தை, மாலை நேரத்தில் குடியிருப்பு பகுதிக்கு வருகிறது. பள்ளி முடிந்து குழந்தைகள் வீடு திரும்பும் போது அச்சமாக உள்ளது.
சிறுத்தை நடமாட்டத்தால் மாலை நேரத்தில் குழந்தைகள் வெளியில் விளையாடக்கூட முடியாத நிலை உள்ளது. உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன்னதாக, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைக்க வேண்டும்,' என்றனர்.