/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புற்றுக்கண் மாரியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழா
/
புற்றுக்கண் மாரியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழா
புற்றுக்கண் மாரியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழா
புற்றுக்கண் மாரியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழா
ADDED : மே 12, 2025 11:30 PM
அன்னுார் : கணேசபுரம், புற்றுக்கண் மாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
கணேசபுரம் புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் 30வது ஆண்டு திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கியது. கடந்த 7ம் தேதி காப்பு கட்டப்பட்டு, கம்பம் நடப்பட்டு, பூவோடு வைக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி மாலை 108 தாய்மார்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை கோவில் வளாகத்தில் விநாயகர் பொங்கல் நடந்தது. மதியம் அலங்கார பூஜை நடந்தது. 1,000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையடுத்து அணிக்கூடை வாண வேடிக்கையுடன் எடுத்து வரப்பட்டது. அம்மன் அழைக்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று காலை 7:30 மணிக்கு மாரியம்மனுக்கு திருக்கல்யாணமும், 11:00 மணிக்கு, அலங்கார பூஜையும், மதியம் அக்னி கரகம் எடுத்து வருதலும் அலகு குத்தி வருதலும் மாவிளக்கு ஊர்வலமும் நடைபெறுகிறது. வரும் 14ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் மறுபூஜை நடைபெறுகிறது.