/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் மலைப்பாம்பு: காத்திருந்த வாகனங்கள்
/
ரோட்டில் மலைப்பாம்பு: காத்திருந்த வாகனங்கள்
ADDED : ஜூன் 13, 2025 09:57 PM

வால்பாறை; வால்பாறையில், ரோட்டில் மலைப்பாம்பு சென்றதை கண்ட வாகன ஓட்டுநர்கள், அது கடந்து செல்லும் வரை வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனர்.
வால்பாறை மலைப்பாதையில், மொத்தம், 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதையில் சிங்கவால்குரங்கு, வரையாடு மற்றும் யானைகள் அதிகளவில் காணப்படுகின்றன.
ஆழியாறு - வால்பாறை ரோட்டில் யானைகள் அடிக்கடி மலைப்பாதை ரோட்டை கடப்பதால், யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற பின் வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும் மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், ஆழியாறு சோதனை சாவடியில் மாலை, 6:00 மணிக்கு மேல் வால்பாறை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வால்பாறை - ஆழியாறு ரோட்டில், 12 அடி நீளமுள்ள மலைபாம்பு ரோட்டில் மெதுவாக ஊர்ந்து சென்றது. பாம்பு ரோட்டை கடப்பதற்காக ரோட்டின் இருபுறமும், ஐந்து நிமிடம் வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்கள் காத்திருந்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆழியாறு - வால்பாறை மலைப்பாதையில் வனவிலங்குகள் அதிகமாக காணப்படுவதால், வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணியர் வேகத்தை குறைத்து, மிகவும் கவனமாக இயக்க வேண்டும்.
'மேலும், மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தவோ, வனவிலங்குகளை தொந்தரவு செய்யவோ கூடாது. மீறினால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.