/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரமான 'பைபர் கிளாஸ்।' சீனுவின் 'மாஸ்டர் கிளாஸ்'
/
தரமான 'பைபர் கிளாஸ்।' சீனுவின் 'மாஸ்டர் கிளாஸ்'
ADDED : செப் 30, 2025 10:29 PM
மு தல் தரமான பைபர் கிளாஸ் வாங்க, நம்பகமான இடம் எது என்றால், அது சீனு அண்ட் கம்பெனி தான். கோவை, டாடாபாத் பகுதியில், 33 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் 'சீனு அண்ட் கம்பெனி'யில், கண்ணாடி பஞ்சு இழைகள் (பைபர் கிளாஸ்), பாலிமர் மற்றும் அனைத்து சார் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
நிறுவனத்தின் சிறப்பான தயாரிப்புகள் குறித்து,நிர்வாகிகள் கூறியதாவது:
பல விதமான பொருட்கள் உற்பத்தி செய்ய வழக்கமாக பயன்படும் மரம், இரும்பு, பிளாஸ்டிக், அலுமினியம், மற்றும் இதர உலோ கங்களைத் தவிர்த்து, கண்ணாடிப் பஞ்சு மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
காற்றாலைகள், மீன்பிடி படகுகள், கதவுகள், கூலிங் டவர் பாடிகள், நீச்சல் குளங்கள், பூந்தொட்டிகள் போன்றவை கண்ணாடி இழைகளாலும், பாலிமராலும் உருவாக்கப்படுகின்றன.
இவற்றின் விலை குறைவானது; அதிக உறுதி வாய்ந்தது ; ஆயுட்காலமும் அதிகம் என, பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. 32 ஆண்டுகளாக, தென்னிந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளுக்கும், தரமான கண்ணாடிப் பஞ்சு மூலப்பொருட்களை வழங்கி வருகிறோம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் விபரங்களுக்கு, 96552 28000, 93451 66444.