ADDED : ஜூலை 21, 2026 02:29 AM
அ நிறம் | அளவு
கோவை: அவினாசிலிங்கம் பல்கலையில், 'குவான்டம் கம்ப்யூட்டிங்: கோட்பாடுகள், தொழில் நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகள்' என்ற தலைப்பில் இரு நாள் தேசிய பயிலரங்கம் நடந்தது.
துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் தலைமை வகித்தார்.
அடிப்படை கோட்பாடுகள், அல்காரிதமிக் செயலாக்கங்கள், குவான்டம் டீகோஹொரன்ஸ், குவான்டம் நிலை முடுக்கம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் பேசினர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் வாழ்க்கை அறிவியல் துறைகளை ஒருங்கிணைக்கும் வகை யில் அமர்வுகள் நடந்தன. இதில் பாரம்பரிய கம்ப்யூட்டர் ஹார்ட்வேரின் வரம்புகள், துல்லிய மருத்துவத்தி ன் எதிர்காலம், பயோ-இன்பர்மேடிக்ஸ், மரபியல் மற்றும் கணக்கீட்டு இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் இடைநிலை ஆராய்ச்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
