/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாக்கடை கால்வாய் குழியால் கேள்விக்குறியான பாதுகாப்பு
/
சாக்கடை கால்வாய் குழியால் கேள்விக்குறியான பாதுகாப்பு
சாக்கடை கால்வாய் குழியால் கேள்விக்குறியான பாதுகாப்பு
சாக்கடை கால்வாய் குழியால் கேள்விக்குறியான பாதுகாப்பு
ADDED : ஜன 07, 2025 02:02 AM

வால்பாறை; வால்பாறையில், பல இடங்களில் கால்வாயின் மேல் பகுதி சில இடங்களில் திறந்த நிலையில் மூடப்படாமல் இருப்பதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
வால்பாறை நகரில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால், மழை காலங்களில் தண்ணீர் ரோட்டில் செல்கிறது. சாக்கடை கால்வாயில் வெளியேறும் கழிவு நீர், ஆறு மற்றும் வீடுகளுக்கும் புகுந்து விடுகின்றன. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள சிறுவர்பூங்கா, கக்கன் காலனி, டோபி காலனி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை போஸ்ட் ஆபீஸ் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை சாலையோரங்களில் உள்ள சாக்கடை கால்வாயின் மேல் பகுதி சில இடங்களில் திறந்த நிலையில் உள்ளது. இதனால் பள்ளி முடிந்து நடந்து செல்லும் மாணவர்கள் திறந்திருக்கும் குழியில் விழும் அபாயம் உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகரில், ரோட்டில் திறந்த நிலையில் கால்வாய் உள்ளதால், குழந்தைகள் முதல் முதியவர் வரை நடந்து செல்லும் போது, குழியில் விழுந்து விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. பெரிய விபத்து ஏற்படும் முன், திறந்த நிலையில் உள்ள சாக்கடை கால்வாயினை உடனடியாக மூடப்பட வேண்டும்,' என்றனர்.

