/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.ஆர். கல்லுாரியில் வினாடி - வினா போட்டி
/
கே.பி.ஆர். கல்லுாரியில் வினாடி - வினா போட்டி
ADDED : நவ 14, 2025 09:32 PM

கோவை: கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரியில், தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி நடந்தது. கே.பி.ஆர். கலைக் கல்லுாரி செயலர் காயத்ரி தலைமை வகித்தார்.
குவிஸ் நிபுணர் ரங்கராஜன், நடுவராகப் பங்கேற்று போட்டிகளை திறம்பட வழி நடத்தினார். போட்டியில், 50க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் 466 குழுக்களாகப் பங்கேற்றனர்.
போட்டியில், பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளி முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்து, ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசை வென்றது. சின்மயா சர்வதேச உறைவிடப் பள்ளி, மூன்றாம் இடத்தை பெற்று, ரூ.6 ஆயிரம் ரொக்கப்பரிசு வென்றது.
கல்லுாரி நிர்வாகத்தின் சார்பில், போட்டியில் வென்ற பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டில், கே.பி.ஆர்., கலைக் கல்லுாரியில் இணைய சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் கீதா, பேராசிரியர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

