/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குவிஸ் என்பது போட்டி அல்ல அனுபவம்'
/
'குவிஸ் என்பது போட்டி அல்ல அனுபவம்'
ADDED : நவ 05, 2025 08:18 PM
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், சமுதாய நற்பணி மன்ற 30ம் ஆண்டு விழா நடந்தது. இதன் ஒரு பகுதியாக, குவிஸ் போட்டி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற யூனியன் பாங்க் ஆப் இந்தியா சேலம் மண்டல துணை பொதுமேலாளர் செந்தில் குமார் பேசுகையில், “குவிஸ் போட்டிகள், அறிவைப் பகிர்ந்து அளிக்கும் அரிய வாய்ப்பு,” என்றார்.
துணை வேந்தர் (பொ) தமிழ்வேந்தன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசுகையில், “வினாடி-வினா என்பது வெறும் போட்டி அல்ல; கற்றல் அனுபவம். இதன் வாயிலாக தன்னம்பிக்கை, பேச்சுத் திறன், மன உறுதி போன்றவை வளர்கின்றன,” என்றார்.
சமுதாய நற்பணி மன்றத்தின் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் ராமலிங்கம், ராஜு, மகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

