/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
படேல் பிறந்தநாள் விழாவில் ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு
/
படேல் பிறந்தநாள் விழாவில் ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு
ADDED : நவ 05, 2025 08:18 PM
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின், 150வது பிறந்தநாள் விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பல்கலையின் ஆடவர், மகளிர் என இரு தரப்பு தேசிய மாணவர் படையின் அலகுகளும் ஒன்றிணைந்து, ஒற்றுமைப் பேரணியை நடத்தினர். மாணவர் நல மைய டீன் ராமலிங்கம், பேரணியைத் துவக்கி வைத்தார். பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், உயிரித் தொழில்நுட்பம், வேளாண் வணிக மேலாண்மை மற்றும் உயிர் தகவலியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிலும் 1,500 மாணவர்கள் உட்பட, பல்வேறு தரப்பினரும் தேசிய ஒற்றுமை உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியை முன்னிட்டு, என்.எஸ்.எஸ்.சார்பில் மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை ஊக்குவிக்கும் வகையில் கட்டுரைப்போட்டி, போஸ்டர் வரைதல், தூய்மை இயக்கம், குவிஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெற்றி வேல் காளை, தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் வித்யா உள்ளிட்டோர், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

