/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்திய மாணவர்கள்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்திய மாணவர்கள்
ADDED : நவ 05, 2025 08:19 PM

கோவை: கவுண்டம்பாளையத்தில், பிருந்தாவன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உலக இண்டராக்ட் வாரக் கொண்டாட்டங்கள் நடந்தது.
விழாவின் ஒரு பகுதியாக, தெருக்கூத்துக் கலை மூலம் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 'மக்கும் குப்பை பூமிக்கு உணவு; மக்காத குப்பை பூமிக்கு விஷம்' எனும் கருப்பொருளில், மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கலையார்வத்துடனும், சமூக அக்கறை யுடனும் செயல்பட்ட மாணவர்கள், பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். விழாவில் ரோட்டரி கிளப்பின் தலைவர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர் ப்ரீத்தா, நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

