/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருவாய் மாவட்ட அளவில் ஜிம்னாஸ்டிக் போட்டிகள்: பறந்து, பறந்து திறமை காண்பித்த மாணவ, மாணவியர்
/
வருவாய் மாவட்ட அளவில் ஜிம்னாஸ்டிக் போட்டிகள்: பறந்து, பறந்து திறமை காண்பித்த மாணவ, மாணவியர்
வருவாய் மாவட்ட அளவில் ஜிம்னாஸ்டிக் போட்டிகள்: பறந்து, பறந்து திறமை காண்பித்த மாணவ, மாணவியர்
வருவாய் மாவட்ட அளவில் ஜிம்னாஸ்டிக் போட்டிகள்: பறந்து, பறந்து திறமை காண்பித்த மாணவ, மாணவியர்
ADDED : நவ 05, 2025 08:20 PM

கோவை: கோவை வருவாய் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள், நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் துவக்கி வைத்தார். பல்வேறு பள்ளிகளில் இருந்து, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
19 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், ப்ளோர் எக்சர்சைஸ், பம்மல் ஹார்ஸ், ரிங்க்ஸ், வால்ட்ஸ், பேர்லல் பார்ஸ், ஹைபார் ஆகிய பிரிவுகளில், விக்டரி வித்யாலயா பள்ளியை சேர்ந்த காவியன் வெற்றி பெற்றார்.
14 வயதுக்கு உட்பட மாணவர் பிரிவில், ப்ளோர் எக்சர்சைஸ், பேர்லல் பார்ஸ் ஆகிய பிரிவுகளில், கார்மல் கார்டன் பள்ளி மாணவன் முகமது தயான், பம்மல் ஹார்ஸ், ரிங்க்ஸ், ஹைபார் ஆகிய பிரிவில், சி.எம்.எஸ்., பள்ளியின் ஸ்டீபன் ரெனோ, வால்ட் பிரிவில், வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் சஜன் வெற்றி பெற்றனர்.
17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், ப்ளோர் எக்சர்சைஸ், ரிங்க்ஸ் பிரிவில் மோனிஷ், பம்மல் ஹார்ஸ், வால்ட், பேர்லல் பார்ஸ், ஹை பார் ஆகிய பிரிவுகளில் சிவராமன் வெற்றி பெற்றனர். இவர்கள், சபர்பன் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
14 வயதுக்கு உட்பட் ட மாணவியர் பிரிவில், ப்ளோர் எக்சர்சைஸ், அன்ஈவன் பார்ஸ், வால்ட் ஆகிய பிரிவுகளில், ஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அனு ஷிவானி, பேலன்சிங் பீம் பிரிவில், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பள்ளியின் அபிராமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் வால்ட், அன்ஈவன் பார்ஸ் ஆகிய பிரிவுகளில், சபர்பன் மேல்நிலைப் பள்ளியின் மோனிகா, பேலனஸ் பீம், ப்ளோர் எக்சர்சைஸ் ஆகிய பிரிவுகளில், எஸ்.இ. எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சீமாஸ்ரீ வெற்றி பெற்றனர்.
19 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் பேலன்ஸ் பீம், அன்ஈவன் பார்ஸ், ப்ளோர் எக்சர்சைஸ் ஆகிய பிரிவுகளில், ஸ்ரீ ராமசாமி நாயுடு வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவி சந்தியா வெற்றி பெற்றார்.
14 வயதுக்கு உட்பட்ட மாணவர் சாம்பியன்ஷிப் பிரிவில், வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம், அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயர்நிலைப் பள்ளி இரண்டாமிடம் பெற்றன.
17 வயதுக்கு உட்பட்ட மாணவர் சாம்பியன்ஷிப் பிரிவில், சபர்பன் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயர்நிலைப்பள்ளி முதல் இரண்டு இடங்கள் பிடித்தன.
14 வயதுக்கு உட்பட்ட மாணவர் சாம்பியன்ஷிப் பிரிவில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயர்நிலைப் பள்ளி, வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி, மகாஜனா மேல்நிலைப் பள்ளி ஆகியவை முதல் மூன்று இடங்கள் பிடித்தன.
17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் சாம்பியன்ஷிப் பிரிவில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயர்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது.

