/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வினாடி - வினாவில் சாதித்தவர்கள்
/
வினாடி - வினாவில் சாதித்தவர்கள்
ADDED : ஜன 25, 2025 12:29 AM

முதலிடம் பிடித்த, வடவள்ளி, பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளி மாணவர்கள் சக்திவேல், அபிஷேக்:
இருவரும் 10வது படிக்கிறோம். ஏற்கனவே இருமுறை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்று, 3வது இடம் பிடித்திருந்தோம். அப்போது எதில் தவறு செய்தோம், எதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், எதில் குறைவான கவனம் இருந்தால் போதும் என்ற அனுபவம் கிடைத்தது.
உடன் பங்கேற்ற போட்டியாளர்களின் அணுகுமுறை பற்றியும் அறியும் வாய்ப்பு கிடைத்தது. இதனால், இம்முறை நம்பிக்கையோடு பங்கேற்றோம்.
கடந்த நவ., பள்ளி அளவில் நடந்த போட்டியில் பங்கேற்று தேர்வானது முதல், இதற்காக தயாராகி வந்தோம். 'பட்டம்' இதழில் வெளியாகும் தகவல்கள், பட்டம் குவிஸ் போட்டிக்காக மட்டுமல்லாமல், வெளியில் நடக்கும் பல்வேறு குவிஸ் போட்டிகளுக்கும் உதவியாக இருக்கின்றன. நிறைய போட்டிகளில் பங்கேற்று பரிசு வாங்கியுள்ளோம்.
---2ம் பரிசு வென்ற, ஒத்தக்கால்மண்டபம் டாக்டர் வி. கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியர் மேனகா ஸ்ருதி, கெய்ட்லின் லிட்வினா:
'பட்டம்' இதழ் படிப்பதன் வாயிலாக பொது அறிவை வளர்த்துக்கொள்ள முடிகிறது. தேர்வு சமயத்தில் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. பள்ளித் தேர்வு மட்டுமின்றி வெளியே நடக்கும் தேர்வுகளுக்கும் உதவியாக இருக்கிறது. சர் சி.வி. ராமன் அறிவியல் போட்டியில் பங்கேற்றபோது, 'பட்டம்' வாசிப்பு அனுபவம் நல்ல பலன் அளித்தது. தமிழ் மீதான ஆர்வமும் 'பட்டம்' இதழ் வாயிலாக அதிகரிக்கிறது.
3ம் பரிசு பெற்ற, காரமடை வித்ய விகாஸ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் ராகவ் (8ம் வகுப்பு), சாத்விக் (10ம் வகுப்பு):
கடந்த 2 மாதங்களாக இப்போட்டிக்குத் தயாராகி வருகிறோம்.
வெளிப்போட்டிகளில் தனித்தனியாக போட்டியிட்டிருக்கிறோம்; பரிசு வென்றிருக்கிறோம்.
இருவரும் ஓரணியாக இணைந்து போட்டியிடுவது இதுவே முதன்முறை. பட்டம் வினாடி வினா விருது போட்டியில் பங்கேற்றது நல்ல அனுபவமாக இருந்தது.
சில தவறுகள் செய்தோம். என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதைக் கற்றுக் கொண்டோம். அடுத்தமுறை தவறுகளைச் சரி செய்து நிச்சயம் வெற்றி பெறுவோம்.
பட்டம் இதழில் வெளியாகும் தகவல்கள், குறிப்பாக 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மிக உதவியாக இருக்கின்றன.

