/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முயல் ரத்தத்தில் தலைமுடி எண்ணெய்; மருந்து கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை
/
முயல் ரத்தத்தில் தலைமுடி எண்ணெய்; மருந்து கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை
முயல் ரத்தத்தில் தலைமுடி எண்ணெய்; மருந்து கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை
முயல் ரத்தத்தில் தலைமுடி எண்ணெய்; மருந்து கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை
ADDED : பிப் 20, 2025 06:30 AM
கோவை; முயல் ரத்தத்தில் தலைமுடிக்கான எண்ணெய் தயாரிப்பதும், விற்பனை செய்வதும் தவறு. புகார் பெறப்படும் பட்சத்தில் கட்டாயம், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சமீபகாலமாக, சமூகவலைத்தளங்களில் காஸ்மடிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில், தலைமுடிக்கான ஹேர் ஆயில் விற்பனை செய்பவர்களே பெரும்பாலும் உள்ளனர். குறிப்பாக, முடி வளர்ச்சியை மையமாக கொண்டு, முயல் ரத்தம் கலந்த எண்ணெய் தயாரிப்பதாக, பலர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
முயல் ரத்தம் கலந்த எண்ணெய் விற்பனை புகாரில், ஈரோட்டில் சில தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கோவை மாவட்டத்திலும் மண்டல மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில், அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். பொள்ளாச்சியில், மூன்று நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து, கோவை மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:
காஸ்மடிக் தயாரிப்பு விதிமுறைகளின் படி, விலங்கு ரத்தம் பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை. முயல்ரத்தம் பயன்படுத்தி, எண்ணெய் தயாரிப்பதற்கு அனுமதி இல்லை. கோவையில் உள்ள, 20 காஸ்மடிக் தயாரிப்பாளர்களுக்கும், இதுகுறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து சமூகவலைத்தளங்களை கண்காணித்து வருகிறோம். இதுபோன்று எண்ணெய் தயாரிப்பவர்கள் மீது, கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

