/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி; 30ல் கோவையில் முகாம்
/
தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி; 30ல் கோவையில் முகாம்
தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி; 30ல் கோவையில் முகாம்
தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி; 30ல் கோவையில் முகாம்
ADDED : ஆக 28, 2025 06:50 AM
கோவை; கோவை அரசு கால்நடை தலைமை மருத்துவமனை, கோவை பிராணிகள் வதை தடுப்பு சங்கம், ரோட்டரி கிளப் இணைந்து இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம், 30ம் தேதி நடத்த உள்ளன.
வெரைட்டி ஹால் சாலையில் உள்ள அரசு தலைமை கால்நடை மருத்துவமனையில் இம்முகாம் நடைபெற உள்ளது.காலை 9 முதல் 1 மணி வரை தெருநாய்கள், வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனைகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தலாம்.
தலைமை டாக்டர் மோகன்ராஜிடம் கேட்டபோது, ''தன்னார்வலர்கள், பிராணிகள் வளர்ப்பு சங்கத்தினர் தெருநாய்களை பிடித்து வருவர். தவிர, மாவட்டம் முழுவதும் அனைத்து வார்டு, கிராமங்களிலும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, விரைவில் கலெக்டர் அறிவிப்பார்,'' என்றார்.