/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராகவேந்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
/
ராகவேந்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED : மே 14, 2025 11:59 PM
கோவை; கோவை, சலிவன் வீதியில், 160 வருடம் பழமை வாய்ந்த, அபய பிரத யோக ஆஞ்சநேயர் ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம் அமைந்துள்ளது.
ஆஞ்சநேயரும், ஸ்ரீ ராகவேந்திர சுவாமியும் அனுக்ரகிக்கும் இக்கோவில், கோவை மாவட்டத்தில் அமைந்த முதல் ராகவேந்திர சுவாமி சன்னிதி என்னும் பெருமை கொண்டதாகும். இங்கு, ஆஞ்சநேயர் சங்கு சக்ரங்கம் தாங்கிய நிலையில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
இக்கோவிலின் புனரமைப்பு திருப்பணிகள் நிறைவுற்று வரும் 19ம் தேதி, உடுப்பி பலிமார் மடத்தின் பீடாதிபதிகள் தலைமையில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
விழாவில் பக்தர்கள் பங்கேற்று, குருவருளும், திருவருளும் பெற வேண்டும் என கோவில் நிர்வாகி ரங்கநாதன் கேட்டுக்கொண்டார்.